ஹோப் காலேஜ் : தீப்பிடித்து எரிந்த மின் கடத்தி பெட்டி: மக்கள் அச்சம்!

கோவை: ஹோஅப் காலேஜ் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மின் கடத்தி பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரில் மின்மாற்றிகளுக்கு பதிலாக, புதைவட மின் வயர்களுடன், மின் கடத்தி பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கோவை ஹோப் காலேஜ் பெட்ரோல் பங்கிற்கு எதிரே பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், ஒரு மின் கடத்தி பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியில் இருந்து இன்று திடீரென புகை வந்துள்ளது. சற்று நேரத்தில் அதில் தீப்பிடித்தது.

இதனால் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு கருவிகளின் உதவியோடு, துரிதமாகச் செயல்பட்டு அந்த தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரில் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற மின் கடத்தி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், மின் வாரியம் உடனடியாக அனைத்து பெட்டிகளையும் பரிசோதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Recent News

Video

Join WhatsApp