Header Top Ad
Header Top Ad

கோவையில் கொடூர விபத்து; கணவருடன் பைக்கில் சென்ற பெண் பரிதாப பலி!

கோவை: கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண் அரசு பேருந்து டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காளப்படியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், இவரது மனைவி வனஜாமணி (60). கணவன் மனைவி இருவரும் அவினாசி சலையில் பீளமேட்டில் இருந்து ஹோப் காலேஜ் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

Advertisement

அவர்களது பைக், ஃபன் மால் அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்த வந்த அரசுப் பேருந்து பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது அந்த வனஜாமணி, அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில், பேருந்தின் சக்கரம் வனஜாமணியின் தலை மீது ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் ஆவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

கோவையின் அனைத்து செய்திகள், மின்தடை மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

கணவனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண், விபத்தில் சிக்கி, அவரது கண் முன்னேயே தலை நசுங்கி கொடூரமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

Comments are closed.

Recent News