Header Top Ad
Header Top Ad

கோவை மாநகராட்சியில் வீட்டு கழிவுகள் சேகரிப்பு முகாம்- எத்தனை டன் கழிவுகள் சேகரிப்பு என தெரியுமா?

கோவை: கோவை மாநகராட்சியில் வீட்டு கழிவு பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாமில் 65.44 டன் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் பெரிய அளவிலான வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம் மூலமாக சுமார் 65.44 டன் அளவிற்கு கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்றும் வகையில் இரு தினங்கள் சிறப்பு சேகரிப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று நடைபெற்ற முகாமில், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 9.89 டன்களும், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 9.05 டன்களும், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 19.70 டன்களும், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 18.55 டன்களும் மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 8.25 டன்களும் என சுமார் 65.44 டன் அளவிற்கு பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு
வடக்கு மண்டலம் (North Zone): 89259 75980. மேற்கு மண்டலம் (West Zone): 89259 75981, மத்திய மண்டலம் (Central Zone): 89259 75982, தெற்கு மண்டலம் (South Zone): 90430 66114, கிழக்கு மண்டலம் (East Zone): 89258 40945, WWW.COMC.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை. நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப் பொருட்களை பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடத்தப்படும் எனவும் அதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என கோயமுத்தூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Recent News