கோவை: கோவையில் மழையால் வீடு இடிந்து விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் முத்துச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்…
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ச்சியாக மிதமான மழையும் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை மதுக்கரை வட்டம் பிச்சனூர் பகுதியில் ஐந்து வீடுகள் வீடு இடிந்து விழுந்தன. அந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.