அடுத்த 7 நாட்கள் எப்படி? கோவை வானிலை முன்னறிவிப்பு!

கோவை: அடுத்த 7 நாட்களுக்கு கோவை மாவட்டத்தில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக்கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறியுள்ளது. நமது கோவை மாவட்டத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இத்தொகுப்பில் காணலாம்.

Advertisement

கோவை மாவட்டத்தில் இன்று முதல் மார்ச் 26ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு.

மார்ச் 27ம் தேதி மழைக்கு வாய்ப்பில்லை. இந்த தினத்தில் குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மார்ச் 28, 29, 30ம் தேதிகளில் குறைந்தது 25 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp