கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தோட்டங்களில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பது குறித்த சர்வதேச மாநாடு துவங்கியது
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தோட்டங்களில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பது குறித்த சர்வதேச மாநாடு துவங்கியது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன், நபார்டு தலைமை பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், சர்வதேச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பத்து மாநிலங்களைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் வேளாண் பயன்பாட்டிற்காக சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதில் உள்ள செயல்முறைகள், அதற்கான நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த துறை வல்லுநர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.




