கோவை ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் 2,13,640 பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது…
கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய இரு போக்குவரத்துத் துறை (RTO) சோதனைச் சாவடிகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் 2,13,640 பறிமுதல் செய்து அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை.
இந்த சோதனையின் போது
கந்தே கவுண்டன் சோதனைச் சாவடியில் 1,47,560 பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ஒரு லட்சம் சேமிப்பு அறையில் இருந்த பிரிண்டருக்குள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. மேஜைகளில் ரூபாய் 17,060 இருந்தது, மேலும் அங்கு இருந்த ரேக்குகளில் 30,500 கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு பணியில் இருந்த சதீஷ் ஜெயச்சந்திரன் மற்றும் உதவியாளர் லோகநாதன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனை சாவடியில் ரூபாய் 66,080 பறிமுதல் செய்து அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் சிவகுரு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புப் துறை காவல் துறையினர் அந்த நான்கு பேரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.