கோவை: கோவையில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்…
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர உள்ள ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், உள்ளிட்டோர் பங்கேற்று இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய பேச்சாளர் ஈரோடு மகேஷ் மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை கோவை மாவட்டம் சார்பில் கல்லூரி கனவு என புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் என்னென்ன உயர்கல்வி படிப்புகள், உள்ளது என்பது குறித்தான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகள் நிறுவனத்தினர் அவர்களது ஸ்டால்களை அமைத்திருந்தனர்.