Header Top Ad
Header Top Ad

கோவை குண்டுவெடிப்பில் உடைமைகளை இழந்தேன்… இப்போது படம் எடுத்திருக்கிறேன் – ஆதவ ஐஸ்வரா

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் வீடு உள்ளிட்டவற்றை இழந்த நான் அதனை மையமாக கொண்டு படத்தை எடுத்துள்ளதாக புதுமுக நடிகரும் தயாரிப்பாளருமான ஆதவ ஐஸ்வரா தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆதவ ஐஸ்வரா தயாரிப்பில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள பாய்(BHAI) திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்திற்குள் காணொளி வாகனம் மூலம் திரையிடப்பட்டது. இதனை அங்கிருந்த மக்கள் பார்த்து படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஆதவ ஐஸ்வராவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Advertisement

இது குறித்து பேட்டி அளித்த ஆதவ ஐஸ்வரா 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படத்தை வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது உண்மை சம்பவம் அல்ல ஆனால் குண்டு வெடிப்பு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் கூறினார். இந்த திரைப்படம் தீவிரவாதத்திற்கு எதிரான படம் என்று கூறிய அவர் தீவிரவாதத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் மதத்தை வைத்தும் கடவுளை வைத்தும் எவ்வாறு அரசியல் செய்யப்படுகிறது என்பது பற்றிய படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

கோவை குண்டு வெடிப்பின் பொழுது ஆர்.எஸ் புரத்தில் உள்ள எங்கள் இடத்திலும் குண்டு வெடிப்பு நடந்ததாகவும் அப்பொழுது எங்கள் வீடு உள்ளிட்டவற்றை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் அதனை மையமாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

கோவை குண்டு வெடிப்பில் கைதானவர்கள் பற்றி இந்த திரைப்படத்தில் கொண்டு வர முடியாது என்பதால் அதனை தவிர்த்து விட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருப்பதாகவும் அதனை தாண்டி தான் இந்த அளவிற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

பாய் என்பது சர்ச்சைக்குரிய சொல் அல்ல என தெரிவித்த அவர் நண்பர்களை கூட அவ்வாறு அழைக்கலாம் என தெரிவித்தார். அரசியல் கட்சிகள் படத்தைப் பார்த்தால் அவர்களுக்கான பதில் இந்த திரைப்படத்தில் இருக்கும் என்றும் யாரையும் எந்த மதத்தையும் புண்படுத்தி இந்த படத்தை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

Recent News