கோவையில் உள்ள கோவில்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் ஆய்வு

கோவை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சங்கமேஸ்வரர் கோவிலின் பழமையான சிலைகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

கோவை, உக்கடம் கோட்டைமேடு பகுதியில் அமைந்து உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவிலில் உள்ள பழமையான சிலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் பழமையான கோவில்களில் நிறுவப்பட்டு உள்ள சிலைகள் மாற்றி அமைத்து வைக்கப்பட்டு இருக்குமா ?? சிலைகள் பாகங்கள் சுரண்டபட்டு உள்ளதா ?? சிலைகள் குறித்தும் சோதனை நடத்தினர்.

கோவில் நிர்வாகத்தின் உள்ள ஆவணங்களையும் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். நேற்றைய தினம் கோனியம்மன் கோவிலிலும் சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். ஆய்வில் மேற்கொண்டு உள்ள தகவல்களை சென்னையில் சமர்ப்பிக்க உள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp