கோவை: கோவைக்கு துணை குடியரசுத் தலைவர் வருவதையொட்டி முக்கிய முக்கிய இடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கபட்டுள்ளது.
இந்திய துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் 28ம் தேதி கோவைக்கு மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். அதனை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா, ரெட்பீல்ட்ஸ், நகர்மன்றம், பேருர் மற்றும் வடவள்ளி மருதமலை ஆகிய பகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயனிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்முறைகளின் படி அறிவிக்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் 27.10.2025 அன்று காலை 8.00 மணி முதல் 29.10.2025 இரவு 10.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும் பகுதிகளில் 27.10.2025 அன்று காலை 8.00 மணி முதல் 29.10.2025 இரவு 10.00 மணி வரையில் தடைசெய்யப்பட்ட கால அளவில் தடையினை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


