கோவை: எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை ஜி.பி சிக்னல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு,பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்து ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல் ஹெல்மெட் மற்றும் சீட் பெட் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தால் எவ்வாறு விபத்து ஏற்படும் இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கும் என அறிவுரை வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார்,கல்லூரி மாணவமாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Pls devalidate the driving licence of triples driving people and hibeam light users in city limits