மூன்றாவது நாளாக போத்தீஸில் வருமானவரித்துறை சோதனை…

கோவை: போத்தீஸ் ஜவுளி கடையில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள், போத்தீஸ் நிறுவனத்தாரின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை தொடர்கிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது நாளான இன்றும் சோதனையானது தொடர்கிறது.

வருமானவரித் துறை சோதனையில் இரண்டு கடைகளும் மூன்று நாட்களாக பூட்டப்பட்டு உள்ளது.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp