இன்ஜின் விவகாரம்- விஜயை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை…

கோவை: விஜயிடம் இன்ஜின் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை விஜயிடம் இன்ஜின் இல்லை, சேஸ், ஆட்கள் என விமர்சித்துள்ளார்.

2026 மத்திய பட்ஜெட் குறித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மத்திய பட்ஜெட்டில் உட்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார். தமிழக அரசு பட்ஜெட் நான்கு லட்சம் கோடிக்கு போடப்பட்டாலும், செலவினம் அதிகம் உள்ளது என கூறினார்.

16 வது நிதி நிலை குழு அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டு உள்ளது என்றும் இதில் நாம் கட்டக் கூடிய வருமான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும், மத்திய அரசு மூலம் ஒவ்வொரு மாநில அரசுக்கும் எவ்வாறு பிரித்து கொடுக்கப்படுகிறது என்பது குறித்து எடுத்து கூறப்படுகிறது என்றார். மாநிலங்களுக்கான நிதி பகிர்வு என்பது 201 ஆண்டுக்கு முன்பு 33 சதவீதமாக இருந்தது என்றும் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 41+1(ஜம்மு காஷ்மீர்) உடன் சேர்த்து 42 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்றார்.

மத்திய அரசு எவ்வளவு தான் நிதி ஒதுக்கினாலும் மத்திய அரசு பட்ஜெட் பற்றி குறை சொல்வது எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கும் வழக்கமான வாடிக்கை தான் என குறிப்பிட்ட அவர் தமிழக முதலமைச்சர், வைகோ உள்ளிட்டோர் குறை கூறி உள்ளார்கள் என்றார். இந்த பட்ஜெட்டில் 7 முக்கியமான அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில் பயோ பார்முலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.

செமி கண்டக்டர் மிஷனுக்கு 40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். எலக்ட்ரானிக் காம்பவுண்ட் மேனுஃபாக்சரிங் வரைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கும் 40 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். வேதியல் பார்க் 3 அறிவித்து உள்ளார்கள். இதை தமிழக அரசு பெற வேண்டும். டெக்ஸ்டைல் பார்க் தமிழ்நாட்டிற்கு மிகவும் பயன்படும். சிறு, குறு தொழில்கள் மூலதனம் நிதிகொடுப்பதற்காக பத்தாயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள் மைக்ரோ விற்கு மட்டும் 2 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். இதை தமிழ்நாடு முழுமையாக பயன்படுத்தி இளைஞர்கள் வேலைவாய்ப்பை முழுமையாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தென்னை மர விவசாயிகள் தேங்காய் மரம் நடுவதற்கு உற்பத்தியை பெருக்குவதற்கு 1 ஒரு கோடி விவசாயிகளுக்கு, தென்னை மேம்பாடு அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறிய அவர் 2030 க்குள் இந்தியன் கோகோ என்பதற்காக புதிய திட்டம் அறிமுகம் செய்து உள்ளனர் என்றார். தமிழ்நாட்டில் மகளிர்சுய உதவி குழு அதிகம் உள்ளது என கூறிய அவர் SheMart என்ற பெயரில் அவர்கள் கடை தொடங்கப்படும் என்றார்.

அதேபோன்று பெண்கள் விடுதி திட்டம் அறிவித்து உள்ளார்கள் என கூறிய அவர் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் பெண்கள் விடுதிக்கு மத்திய அரசுதான் நிதி தருகிறது எனவும் கூறினார். நேற்று கோவை விமான நிலையத்தில் வைகோ, காற்றில் கோட்டை கட்டுவதாக கூறி உள்ளார். 53 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் மட்டும் கூட, ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்க. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசம் 4.3 என்று தான் உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைவரும் வரவேற்று உள்ளனர்.

மேலும் அதிச்சநல்லூர், உள்ளிட்ட பகுதிகளுக்கான நிதி ஒதுக்கி உள்ளார்கள். கலைஞர் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கி மியூசியம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிட்ட அவர் அதனை வரவேற்பதாகவும் அதே சமயம் அப்பாவிற்காக அதிக நிதி ஒதுக்கி ஸ்டாலின் அந்த மியூசியத்தை கட்டியுள்ளார் அதே போன்று அதிச்சநல்லூருக்கு நிதி ஒதுக்கி உள்ளோம் இது அனைவருக்கும் பயன்பெறும் என்றார். ரயில்வே துடைக்கும் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட அவர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத், அம்ரித் பாரத் இயக்கப்பட்டு உள்ளது. 16 லட்சம் கோடி இந்தியா முழுவதும் நிதி ஒதுக்கி சென்னை டு பெங்களூர், ஹை ஸ்பீட் நெட்ஒரக் மாற்றப்பட்டு உள்ளது.

300 முதல் 320 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்படுவதால் விரைவில் செல்ல முடியும். அதேபோன்று சென்னை ஹைதராபாத் ரயில்வே சேவையும் கொண்டு வரப்பட உள்ளது. இதை அனைவரும் வரவேற்கிறோம். இளைஞர்கள் ஒரு தலைநகரத்தில் இருந்து இன்னொரு தலைநகரத்திற்கு மிகவும் வேகமாக பயணிக்க முடியும் என்றார்.

மேலும் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நல்ல செய்தியை நாட்டிற்கு வழங்கி உள்ளார் குறிப்பாக இந்த மண்டலத்திற்கு அறிவித்துள்ளார் என குறிப்பிட்ட அவர் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இழுபடியாக இருந்த அமெரிக்க ஒப்பந்தத்தை நேற்றிரவு முடிவுக்கு வந்து உள்ளது என்றார். அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் 50 சதவீத வரி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் 18 வரி என்று அறிவித்து உள்ளார் என்றார். 18 சதவீதம் மற்றும் வரி என்பது வரவேற்கத்தக்க ஒன்று. MSME யை பொறுத்த வரை கடன் எந்த வகையிலும் குறையவில்லை என்றும் 10 ஆயிரம் கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று தொழிலாளர்கள் முதலீடு செய்யும் மூலதனத்தில் மத்திய அரசும் பங்கு வழங்குகிறது. எனவே சிறு குறு தொழில்களுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றார். மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு நாம் அந்த துறைக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை கூற வேண்டும். சிறு, குறுந் தொழில்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது என தெரிவித்தார்.

கிழக்கு இந்திய நிறுவனங்கள், ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம் எனவே இதை அடுத்த கட்டத்திற்கு செல்லும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறு, குறு தொழிலில் உற்பத்தி அதிகரித்து உள்ளது. எனவே எதிர்க்கட்சியினர் சிறு குறு தொழில்களுக்கு என்ன செய்தார்கள்? மத்திய அரசு மற்ற நாடுகளை பார்த்து 20 ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்த்து தான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள் என்றார். மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு பயன்படுத்துகிறதா ? என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பட்ஜெட் நாலு லட்சம் கோடி. ஆனால் 52 லட்சம் கோடி பட்ஜெட்டில் நான் 14 லட்சம் கோடி மத்திய அரசு உள் கட்டமைப்பிற்கு ஒதுக்கி உள்ளார்கள் என்றார். கடன் வாங்கி வாங்கி வட்டி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

ஆந்திர மாநில முதல்வர் அவரது மாநிலத்திற்கு சிறப்பாக பெற்று செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் தோல்வி உறுதி என்பதற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறுவது தவறு என்றார். அமைச்சர் டி.ஆர்.ராஜா எங்களுடைய போட்டி ஐரோப்பாவிற்கு இடையே தான் என்று கூறுகிறார் என்றால் அது எந்த ஐரோப்பா வளர்ந்த ஐரோப்பாவா அல்லது அதன் அருகில் உள்ள ஐரோப்பாவா என்று விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாவின் நினைவு தினமான இன்று அண்ணாவின் பழியை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு அண்ணா வழியை பின்பற்றுகிறோம் என்று தி.மு.க கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தி.மு.க மீது இருக்கும் வெறுப்பு திராவிட சித்தாத்தின் மீது இருக்கும் வெறுப்பாக மாறி உள்ளது என்றும் கூறினார். மேலும் அண்ணாவை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று திமுகவினர் கூறுவது பசு மாட்டின் மீது காகம் அமர்வதை போன்று தான் உள்ளது எனவும் விமர்சித்தார். தி.மு.க அமைச்சர்களை ஒரு அறையில் வைத்து அவர்களிடம் அண்ணா குறித்து பத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க கூறினால் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.

2024 பாராளுமன்றத் தேர்தல் அவர்களுக்கு ஒரு அறிகுறி தான். முன்பு 56 சதவீதமாக இருந்த வாக்கு அவர்களுக்கு 41 சதவீதமாக குறைந்து உள்ளது என்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே விஜய்யை பார்த்து பேசினேன் என்று கூறுபவரை, தமிழக காங்கிரஸ் தலைவரால் சஸ்பெண்ட் செய்ய முடியவில்லை. அதற்கும் அவர் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறுகிறார். இதுதான் அடிமை கட்சி என்றார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பொறுத்த வரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இல்லை, வண்டி இல்லை சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து ட்ப்பா என்ஜின் என்று கூறுகிறார்கள் என்றார். மேலும் பொதுக்களிவறைகளில் முகத்தை மூடிக்கொண்டு வந்து கிறுக்குவதைப் போலவே திமுகவினரும் பேசி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தரிகட்டுப் போய்விட்டது. 5 ஆண்டுகளில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை அவர்கள் தான் அல்லா கொடுத்து உள்ளார்கள் என்றார். விஜய் பேசும் போது மக்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், ஆரவாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறார் என்றும் மக்களை சந்திக்க வைக்க விஜய் முயல வேண்டும் என்றும் விஜய் பேசும் பொழுது மக்கள் சிந்திக்கும் அளவிற்கு எதுவும் இல்லை என்று தான் நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாடு முழுவதும் சென்று உறவினருடன் சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை கருத்து கேட்பு மூலம் பெற்று வருகிறார்கள். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட குழுவினர் பார்த்து கொள்வார்கள். தேர்தல் அறிக்கையில் அனைத்து விஷயங்களுக்கும் பதில் கிடைக்கும் என்றார். அதேசமயம் தனிப்பட்ட நபரின் எண்ணங்கள் தேர்தல் அறிக்கையில் வராது தேர்தல் அறிக்கையை எல்லாம் எங்கள் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் அவர்களிடம் அதைப் பற்றி கேள்வி எழுப்புங்கள் எனவும் கூறினார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகுல் காந்தி பேசியது பச்சை பொய். பத்திரிகைகளில் எழுதுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் அதற்கு மட்டும் தான் பதில் வர முடியும் என்றார்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது என்ற கேள்விக்கு எனது தந்தையாரின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எனவே அடிப்படை வேலைகளை செய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்னால் அதிகமாக டிராவல் செய்ய முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரிடம் தெரிவித்திருப்பதாகவும் கட்சியும் அதனை ஏற்றுக் கொண்டு வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள் அதே சமயம் பாஜக கட்சி என்ன சொல்கிறதோ அதனை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார். கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் பாஜக வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி எனக் கூறுகிறதோ அதனை நாங்கள் செய்வோம், தற்போதைக்கு அதிகம் டிராவல் செய்ய முடியாத சூழ்நிலை எனக்கு உள்ளது அதையும் கட்சி புரிந்து கொண்டார்கள் சம்பந்தப்பட்ட நேரத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை கட்சி சொல்லட்டும் அதன் பிறகு அதனைப் பற்றி பேசுகிறேன் என பதில் அளித்தார். சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்வார்கள் தலைவர்கள் அதனை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். தேர்தலுக்கான காலமும் நேரமும் இன்னும் உள்ளது கட்சி என்று கூறுகிறது என்று முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அதைப் பற்றி பதில் அளிக்கிறேன் என தெரிவித்தார்.

இந்த பகுதியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளார். தொடர்ந்து அவர் வெற்றி பெற்று செல்ல வேண்டும் அதேபோன்று இந்த கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று அதிக மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும் அதற்கு நாங்கள் பாடுபடுவோம் என்றார்.

கரூர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு எஸ் பி பச்சை பொய் கூறுகிறார் என்றும் அவர் எம்எல்ஏ வை காப்பாற்றுவதற்காக ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும் இது குறித்து சட்டசபை தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்கிறார்கள் என்றால் அதனை சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர்கள் வேண்டுமென்று தவறு செய்திருந்தால் அவர்களை தவறு செய்ய சொன்னது யார் என்று கேள்வி எழுப்பிய அவர் என்னைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் காவல் ஆணையாளர் உள்ளிட்டவர்களின் தொலைபேசி கால் ரெக்கார்டை எடுத்துப் பார்த்த ஆய்வு செய்து நீதிமன்றம் முன்பு சத்யபிரமாணம் செய்து தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலை தனிப்பென்குயின் போன்று செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு, அந்த ஒரு பென்குயின் அதன் பாதையை தனியாக தேர்ந்தெடுத்து சென்றத அதனை பற்றி பேசுகிறோம் அது 2017 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படம், சில நேரம் அந்த ஒற்றை பென்குயின் போன்று இருப்பதும் தவறில்லை என்று நான் நினைக்கிறேன் என பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக விரைந்து முடித்திட வேண்டும்- கோவை மேயர் அறிவுறுத்தல்…

கோவை: கோவையில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடித்திட அறிவுறுத்திய கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி. கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

Video

Join WhatsApp