திமுக ஒன்றும் பாஜக அல்ல, நாங்கள் அதிமுகவும் அல்ல – கோவையில் முத்தரசன் பேட்டி…

கோவை: எங்களை நிர்பந்திப்பதற்கு திமுக பாஜவுமல்ல அடிபணிவதற்கு நாங்கள் அதிமுகவைப் போல் அடிமையுமில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேர்தலில் இவ்வளவு இடங்களில் தான் கொடுப்போம் என நிர்பந்திப்பதற்கு திமுக பாஜக அல்ல என்றும் ஏற்றுக்கொண்டு அடிபணிவதற்கு நாங்கள் அதிமுக போல் அடியுமையுமில்லை என சிபிஐ கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

தேர்தல் சுற்றுப்பயணமாக திமுக கூட்டணியின் முக்கிய பிரமுகர்களை சந்திக்க பெரியநாயக்கன்பாளையத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரு இடம் குறைத்து பெறப்பட்டுள்ளது. திமுக நிர்பந்தித்ததா? இல்லை சமரசம் செய்து கொண்டீர்களா? என பல்வேறு செய்தியாளர்கள் கேட்கின்றனர்.

Advertisement

திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. இக்கூட்டணியைபோல் வேறு எந்த கூட்டணியும் 10 ஆண்டுகளாக நிலைத்து நின்றதில்லை. கடந்த 1952 ஆண்டு முதல் தமிழக தேர்தல் வரலாற்றில் கூட்டணி அமைத்தே போட்டிகள் நடைபெற்றுள்ளன.

Click here to read news சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!

Advertisement

நான் அறிந்த வரையில் திமுக கூட்டணியானாலும், அதிமுக கூட்டணியானாலும் ஓராண்டுக்கு மேல் நீடித்ததாக வரலாறு இல்லை. ஆனால் தற்போதைய எங்கள் திமுக கூட்டணி 10 ஆண்டுகளாக நீடிப்பதற்கு காரணம் கொள்கைக்கூட்டணி. கொள்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதனால் சீட்டு என்பது பிரச்னையில்லை. இது நமக்கு எது அபாயம் என்றே பார்க்கவேண்டும். எது தீங்கானது? ஆர்.எஸ்.எஸ்.தான் தீங்கானது. இந்த தீங்கிற்கு தமிழகத்தில் சிலர் துணைபோய்விட்டனர். இவர்களை அனுமதிப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்து.

Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!

அந்த அக்கறையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனால் சீட்டு குறைவதைப் பற்றியே கூடுவதைப் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை. என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, வால்பாறைத் தொகுதியின் முன்னாள் எம்,எல்.ஏ. ஆறுமுகம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிமன்றத் தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.