Header Top Ad
Header Top Ad

கோவை வேலைவாய்ப்பு: ரூ.28,000 ஊதியத்தில் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வேலை!

கோவை: கோயம்புத்தூர் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிக்கு ரூ.28,000/- (ரூபாய் இருபத்து எட்டாயிரம் மட்டும்) தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Smartphone Technician cum App Tester தொழில் பிரிவில் உள்ள ஒரு பணியிடத்திற்கு பொது போட்டி முன்னுரிமை அல்லாத இனசுழற்சியில் 37 வயதிற்குள் உள்ள கீழ்க்காணும் கல்வி தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

Smartphone Technician cum App Tester @ ITI (NTC) தேசிய தொழிற்சான்றிதழுடன் 3 வருட முன் அனுபவமும்(NAC) தொழிற் பழகுநர் சான்றிதழுடன் அதே துறையில் இரண்டு வருட முன் அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் 3 வருட பட்டயப்படிப்புடன் அதே துறையில் இரண்டு வருட முன் அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் பட்டப்படிப்புடன் அதே துறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் 27.06.2025 மாலை 5.30 மணிக்குள் முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்)ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோயம்புத்தூர் – 641 029 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் என என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்

Advertisement

Recent News