கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை- கைக்குள் சிக்கிய ஸ்டாப்ளர் பின்- அவதிப்படும் எலக்ட்ரீசியன்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தவறாக மேற்கொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வருவதாக எலக்ட்ரீசியன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த சரத்பாபு என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறிது மாதங்களுக்கு பிறகு அவரது வலது கையில் அதிக அளவில் வலி ஏற்பட்டதால் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அப்பொழுது எக்ஸ்ரே எடுத்து பார்க்கு. பொழுது அறுவை சிகிச்சை செய்த அவரது கை எலும்பில் ஸ்டேப்ளர் பின் இருப்பதாகவும், எனவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் காலதாமதம் ஆனால் கையை அகற்ற வேண்டுமென கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்ட போது சரியான பதில் அளிக்காமல் அவரை அலைக்கழித்ததாகவும்
கோவை அரசு மருத்துவமனையில் அவரது கையில் அறுவை சிகிச்சை செய்த போது தவறுதலாக ஸ்டேபிளர் பின்னை உள்ளே வைத்து தைத்து உள்ளதாகவும் எனவே சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தனக்கு நேர்ந்த நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என கூறிய அவர், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இதனால் கையில் அதிக வலி ஏற்படுவதாகவும் தன்னால் சரிவர வேலை செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் அதனால் தனக்கு வேலை கிடைப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்து மருந்துகள் அதிகம் அழைக்கப்பட்டதால் வாய் அடிக்கடி சரிவர பேச முடியாமல் போவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.