தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி விழிப்புணர்வு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர் நல மையம் மற்றும் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, கோயம்புத்தூர் GKNM மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அண்ணா அரங்கில் “புற்றுநோய், ஆரோக்கியம் & உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

முனைவர் ராமலிங்கம், வரவேற்புரை வழங்கி. மாணவர்களிடையே ஆரோக்கிய விழிப்புணர்வு மிக அவசியம் என்பதையும். புற்றுநோய் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைப்பதில் ஆரம்ப நிலையில் கண்டறிதல், தடுப்பு பராமரிப்பு மற்றும் நல்ல வாழ்க்கைமுறை மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் வலியுறுத்தினார்.

புற்றுநோயியல் துறை தலைவர் மருத்துவர் சிவநேசன் GKNM மருத்துவமனை, அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விரிவான உரையாற்றி, ஆரம்ப கட்ட பரிசோதனை, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் புற்றுநோய் தடுப்பில் சமீபத்திய போக்குகள் குறித்து விளக்கினார்.

Advertisement

நீரிழிவு மற்றும் நீரிழிவு பாத பராமரிப்பு நிபுணர், மருத்துவர் முத்துலட்சுமி. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து உரையாற்றி, சமநிலையான உணவுமுறை, மனஅழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பதில் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்

இந்த நிகழ்ச்சியை மாணவர் நல மையம் விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...