கோவை: இருகூரில் குப்பைகள் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து News Clouds Coimbatore வாசகர்கள் கூறியதாவது:-
கோவை இருகூரை அடுத்த கே.ஜி போஸ் நகர் எக்ஸ்டன்சனில் கடந்த பல மாதங்களாக சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த குப்பைகள் பல வாரங்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அங்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வழியாகச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சாலையோரம் மலைபோல் கொட்டப்பட்ட குப்பைகள், காற்றின் வேகத்தில் சாலையெங்கும் பரவிக்கிடப்பதால் வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனர்.
இங்குள்ள குப்பைகளை அகற்றுவதோடு, மேற்கொண்டு குப்பைகள் தேங்காத வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வாசகர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.