கோவை: ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி கோவை வந்தார்.
ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கோவை வந்த ரஜினிகாந்த் 20 நாட்கள் ஆனைகட்டி அருகே தங்கி படத்தில் நடித்து வந்தார்.

இதனிடையே, தற்போது மீண்டும் ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்காக விமானம் மூலம் கோவை வந்தார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “எனக்கும் கமலுக்கும் சேர்ந்து நடிக்க ஆசைதான். கதை கதாபாத்திரம் சரியாகக் கிடைக்க வேண்டும். இன்னும் சரியான டைரக்டர் கிடைக்கல.” என்று கூறினார்.
தொடர்ந்து கோவை வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், 6 நாட்கள் ஜெயலர் 2 சூட்டிங் நடைபெறுவதாகவும், படம் ஜூன் மாதத்திற்கு மேல் வெளியாகும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, சினிமா கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “No Commends” என்று மட்டும் பதில் கூறிச்சென்றார்.