காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி: கோவையில் சிறப்பு ஹோமம்!

கோவை: காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பேரூர் மகா பெரியவர் மணிமண்டபத்தில், ஹோமம், பாராயணம், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி தினம், பேரூர் காஞ்சி பெரியவர் மணி மண்டபத்திலுள்ள ஸாம வேத பாராயண டிரஸ்ட் சார்பாக கடந்த மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வேத வேதபாராயணம் செய்யப்பட்டது. மேலும், சங்கீர்த்தனம், அன்னதானம் உள்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Recent News

Video

Join WhatsApp