மருதமலையில் கந்தர் சஷ்டி தொடக்கம்- கங்கணம் கட்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்…

கோவை: மருதமலையில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கங்கணம் கட்டி விரதத்தை துவங்கினர்.

மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா இன்று தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் கங்கணம் கட்டி விரதத்தை துவக்கினர்.

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிந்ததை அடுத்து இன்று முதல் கந்தர் சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

இந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சிவாச்சாரியார்களிடம் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இந்த நிகழ்வில், யாகசாலைகள் அமைத்து பூஜை தொடங்கியது.

28ம் தேதி வரை கந்தர் சஷ்டி விழா கொண்டாடபட உள்ள நிலையில் இனி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக 27, 28 ஆகிய இரண்டு தினங்களுக்கும் பக்தர்கள் மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கோவையில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தர் சஷ்டி விழா துவங்கி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp