கோவை: கனிமொழி தூங்கும் போது வந்த கனவை மைக்கில் பேசுவார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுனனை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை அவர் துவக்கினார். முன்னதாக வேட்பாளர் அம்மன் அர்சுணன் பேசும் போது, “கரூரில் இருந்து வந்தது சிங்கம் அல்ல அசிங்கம். ஒரு ஆளை எதிர்க்க 21 ஆட்கள் வந்துள்ளார்கள். பாண்டவர்களில் ஒருவர் நான் அர்ஜுனன். அரவக்குறிச்சியில் 3 செண்ட் இடம் தருவேன் என கூறினீர்களே செய்தீர்களா? 41 பேரை கொன்றது தான் மிச்சம். கோவை மக்களை ஏமாற்ற தங்கம் தருகிறேன் வெள்ளி தருகிறேன் என்கிறார்.” என்றார்.
பின்னர் அண்ணாமலை பேசும் போது, “எளிய மனிதர் அம்மன் அர்சுணன். எங்கே சென்றாலும் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார். 10 ரூபாய் பாலாஜி அவருடைய தகுதி என்ன? ஜெயிலில் இருந்தது தகுதி 1. அவர் கொடுத்த கொலுசில் வெள்ளி இல்லை. இங்கு வந்தது 2 வது சாதனை. 5 கட்சி மாறி இருப்பது 3 வது சாதனை. குறைந்த பட்சம் 50000 வாக்கு வித்தியாசத்தில் அம்மன் அர்சுனன் வெற்றி பெறுவார். கரூரில் 251 பட்டி போட்டு இருந்தார்கள், மக்களை அடைக்க. கரூர் காரர்கள் இங்கு வந்தும் பட்டி போட இடம் கேட்டார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியை வேண்டாம் என முடிவு செய்து விட்டார்கள்.
தேஜ கூட்டணி ஆட்சிக்கு வரும். கோவை தெற்கு செந்தில்பாலாஜி வீழ்ச்சி ஆரம்பித்து சேபாக்கம் வரை செல்ல போகிறது. கரூர் திமுகவில் இருந்த 18 சுயேட்சை வேட்பாளர்களை கொண்டு வந்துள்ளார். பூத்திற்காக கொண்டு வந்துள்ளார்கள், சண்டை போடுவதற்கும் கலவரம் செய்வதற்காக கொண்டு வந்துள்ளார்கள்.
அனைவருக்கும் ஒரே நோட்டரி போட்டுள்ளார்கள். இவர்களை கோவைக்குள் விடக் கூடாது. அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்து என அனைவருக்கும் தெரியும், பிரதமரே அதனை கோடிட்டு காட்டுகிறார். திமுக ஆட்சியில் 2080 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 30,000 க்கும் மேல் போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுபாடு நம் கையில் இருக்க வேண்டும் அவர்களுக்கு சுதந்திரத்திற்காக தமிழகத்தின் முதன்மை மாவட்டம் கோவை, சென்னையை விட வருமான உள்ள மாவட்டம் கோவை.
திருவாரூரில் ஸ்டாலின் நிற்கலாமே? இரண்டு பெட்டி கொடுத்தால் அன்பு தம்பி, 5 பெட்டி ஆற்றல் மிகுந்தவர் என்பார், அதிக பெட்டி கொடுத்ததால் தளபதி என்றே செந்தில்பாலாஜிக்கு பெயர் வைத்துள்ளார் முதல்வர். அதிமுகவை அடிமை கட்சி என கூறுகிறார் ஸ்டாலின். அதிக முறைமுறை ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக, திமுக கூட இல்லை. காங்கிரஸ் முன்பு திமுக பெட்டி பாம்பாக உள்ளது, காங்கிரஸ் மீது வழக்கு உள்ளது. ஆ.ராசா பேசினால் வழக்கு வரும் அதனால் அவரை பேசாமல் வைத்துள்ளார்கள். நம் கூட்டணியில் குடும்ப ஆட்சி கிடையாது. அண்ணாதுரை நான்கு வளர்ப்பு குழந்தைகளை அரசியலுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் எங்கே? அவர்கள் எல்லாம் அரசு வேலை செய்து வருகிறார்கள். அண்ணாதுரைக்கு நேர் எதிர் கட்சி என்றால் அது திமுக தான். செந்தில்பாலாஜி கரூருக்கு கூட போக முடியாது. அறிவாலயத்திற்கு தான் செல்ல முடியும்.
அம்மன் அர்சுணனுக்கு ஆதரவு அளியுங்கள். திமுக ஸ்டாலின் அவர்கள் செய்த சாதனைகளை பற்றி பேச மாட்டார், ஆனால் தேர்தல் அறிக்கையை தான் கூறுவார். ஸ்டாலின் கணக்கு ஆசிரியர் நல்ல ஆசிரியர், ஆனால் மாணவன் தான் மக்கு. கனிமொழி தூங்கும் போது வந்த கனவை எல்லாம் மைக்கில் பேசுவார். கனிமொழி உங்கள் பெயரில் சிலிண்டர் கணக்கு உள்ளதா? நீங்கள் சிலிண்டர் வாங்கி உள்ளீர்களா? சிலிண்டர் தட்டுபாடு என்று பொய் சொல்ல கூடிய ஒரே ஒருவர் கனிமொழி தான். பொய்யை பேசுவதையே ஒரே கொள்கையாக வைத்துள்ளார்கள்.
10 ரூபாய் பாலாஜி என ஏன் செல்கிறோம் என்றால் டாஸ்மாக் வருமானம் மட்டும் 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஆகும். 14,950 கோடி ரூபாய் 10 ரூபாய் பாட்டிலுக்கு சம்பாதித்துள்ளார். அம்மன் அர்சுணனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்களுக்காக தான் எடப்பாடியார் முதல்வர் ஆக வேண்டும். ஜாபர் சாதிக் முதல்வர், உதயநிதி ஸ்டாலினிடம் போட்டோ எடுக்கிறான். அவன் கஞ்சா விற்பவன் அவனை எப்படி போலிஸ் கைது செய்து தாக்குவார்கள்? அம்மன் அர்சுணன் உறுதியாக வெற்றி பெறுவார்” என்றார்.

