கோவை: கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஓமன் நாட்டு அணியினர் தங்கப் பதக்கத்தையும் இந்திய அணியினர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.
கோவை மாவட்ட கராத்தே ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி எஸ் ஜி கல்லூரி வளாகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா தாய்லாந்து ஓமன் மலேசியா இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த 520 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், ஐந்து வயது முதல் வயது வரம்பின்றி பல்வேறு பிரிவுகளாக கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் குழு கட்டா பிரிவில் ஓமன் அணி தங்கப் பதக்கத்தையும், இந்திய அணி வெள்ளி பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

மேலும் சாம்பியன் ஆப் சாம்பியன் என்ற பட்டத்தை அதிக பதக்கங்கள் வென்ற இந்திய அணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மேலும் இந்த போட்டிகளை பார்வையிடுவதற்காக மலேசியாவில் இருந்து கராத்தே பயிற்சியாளர்கள் வருகை தந்திருந்தனர். இந்தியாவில் தற்போது நடத்தப்பட்டு வரும் இந்த போட்டிகள் விரைவில் அதிக நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கராத்தே போட்டியில் வீரர் வீராங்கனைகள் ஆக்ரோஷத்துடன் ஒருவரை ஒருவர் எதிர் கொண்ட காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Karate dress for boys and Girls – Order Now









