கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் கொள்ளை- மேலும் இருவர் கைது…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை, கவுண்டம்பாளையத்தில்  அரசு அலுவலர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த 28ம் தேதி 13 வீடுகளில் 42 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), கல்லு ஆரிப் ( 45) மற்றும் இர்பான் (42)  ஆகிய மூன்று பேரை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

இதில் ஆசிப் (48)  இறந்துவிட்டார். மேலும் இந்த கொள்ளை கும்பலுக்கு ஆட்டோ ஓட்டுநராக இருந்து உதவியதாக ஆட்டோ டிரைவர் ஆயுப்கான் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் இந்த கொள்ளை கும்பலுக்கு கோவையில் இருந்து திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த தாவூத் (18) , ஃபர்யான் (23) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரிலே, கொள்ளையர்கள் வந்து கொள்ளை திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் ஒருவர் இறந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஃபர்மான் என்பவர் உயிரிழந்த ஆசிபின் தம்பி என கூறப்படுகிறது.

Recent News

Video

Join WhatsApp