கோவையில் குழந்தைகள் பேஷன் ஷோ… முன்பதிவு செய்வது எப்படி?

கோவை: கோவையில் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ இம்மாதம் நடைபெற உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த Re & Ri நிறுவனத்தினர் ‘Stars of tomorrow’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

Advertisement

3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 8 வயது முதல் 12 வயதுடைய சிறுவர்-சிறுமியருக்கு தனித்தனியே இப்போட்டி நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி உப்பிலிபாளையத்தில் உள்ள SSVM School of Excellence பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement

வெற்றி பெறும் குழந்தைகளுக்கு, ‘Stars of tomorrow’ விருதுடன், பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்க இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

இந்த போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பேஷன் ஷோ தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், பதிவு செய்யவும், கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் 9940500462, 9994117432.

அமேசான் பிரைமில் இணைய கீழே சொடுக்கவும் 👇

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group