கோவை: மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குற்றாலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்தலங்கள் அனைத்தையும் மூடவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கனமழை பெய்ததால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நீர்வரத்து சீராகி கடந்த ஜூலை 31ம் தேதி தான் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே ரெட் அலெர்ட் காரணமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Join our WhatsApp Group for Coimbatore Updates

இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான வாய்ப்பு (ரெட் அலர்ட்) கொடுக்கப்பட்ட காரணத்தால் மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படியும், வனச்சரக அலுவலரின் ஆலோசனையின் பேரிலும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று 05/08/2025 செவ்வாய்க் கிழமை மூடப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் கோவை குற்றாலம் நாளை திறக்கப்படுகிறதா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.




