கோவை குற்றாலம்: வனத்துறையின் அறிவிப்பு… ஆர்ப்பரிக்கும் நீர் – வீடியோ

கோவை: கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மே மாதம் தொடர் கனமழை பெய்தது. இதனால் கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்தது.

Advertisement

இதனால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த மே 24ம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்தது.

அருவிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கோவை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை குற்றாலம் சுற்றுலா மீண்டும் திறக்கப்படாது என்பதை வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement

வெள்ளம் கரைபுரண்டோடிவரும் நிலையில், நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா அனுமதி வழங்கப்படாது என்றும், நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு, அதிகாரிகளின் உத்தரவுப்படி சுற்றுலாவுக்கு அனுமதி மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்து உள்ளார்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group