கோவை: வெள்ளப்பெருக்கால் மூடப்பட்ட கோவை குற்றாலம் 8 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத்தலம்.
கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட மக்களும் வந்து செல்லும் இடமான இங்கு அதிக மழைப்பொழிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கடந்த மே 23ம் தேதி மூடப்பட்ட கோவை குற்றாலம் சுமார் 50 நாட்களுப் பிறகு இம்மாதம் 11ம் தேதி தான் திறக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த 23ம் தேதி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோவை குற்றாலம் மூடப்பட்டது.
கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோ காட்சிகள் இங்கு காணலாம்:-
இதனிடையே தற்போது அருவிகளில் நீர் வரத்து சீராகியுள்ளதால், இன்று முதல் கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவையில் தற்போது லேசாக வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், கோவை குற்றாலம் போனால் ஜில்லுன்னு ஒரு குளியல் போட்டுவிட்டுத் திரும்பலாம்.
Join our WhatsApp Group for Coimbatore Updates
கட்டணம் & நேரம்

கோவை குற்றாலத்திற்குச் செல்ல தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வனத்துறை அனுமதி வழங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
கோவை குற்றாலத்தில் பெரியவர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.25 என்ற நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் கோவை குற்றாலம் விடுமுறை.