கலைஞர், ஜெயலலிதா கூட்டணி வழிமுறைகள் இப்போது இல்லை- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி…

கோவை: கலைஞர், ஜெயலலிதா கூட்டணி வழிமுறைகள் தற்போது இல்லை என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சிலவற்றை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த சந்திப்பு என்றார். இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான ஆண்டு என்றும், சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் திட்டமிடும் தேர்தல் என்றார்.

மதுரை மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளதாகவும் வழக்கத்திற்கு மாறாக தேர்தலை அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டதாக, அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துவங்கி விட்டனர் என்றார்.

ஊடகங்களிலும் புதிய தமிழகம் கட்சி பற்றியும் எங்கள் நிலைப்பாடு குறித்தும் செய்தி வந்தபடி வண்ணம் இருப்பதாக கூறிய அவர்,
இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்பதாக செய்திகள் பரவியது அதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்கின்றேன் என கூறினார்.

கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும் யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார். சட்ட தேர்தலை கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருவதாகவும் தங்களின் நிலைப்பாட்டை அதிகபட்சம் ஓரு வாரத்திற்குள் தெளிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.

கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களின் கூட்டணிக்கு சில வழி முறைகள் வைத்திருத்தனர் என குறிப்பிட்ட அவர் ஆனால் இப்போது அது போன்று இல்லை, புதிய தமிழகத்தை அதிகாரபூர்வமான முறையில் எந்த கட்சிகளும் அணுக வில்லை என தெரிவித்தார். கூட்டணியில் பங்கு என்ற நிலைப்பாடுகளுக்குள் இப்போது நாங்கள் போகவில்லை, என்றும் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாநாடில் 13 வது தீர்மானத்தில் இருந்து நாங்கள் விலகவில்லை எனவும் இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 100 தொகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கின்றோம்,
புதிய தமிழகம் கட்சி இல்லாமல், தென் தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். தங்களை யாரும் அழைக்கவில்லை என்பதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை, புதிய தமிழகம் கட்சி ஒரு சில பகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்பதால் தேர்தலுக்கு 5 நாட்கள் முன்பே தேர்தல் ஆணையம் சின்னம் கொடுக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp