கோவை: 3 ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களாகிய தங்களுக்கும் அரசு மடிக்கணினி வழங்க வேண்டுமென அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” விலையில்லா மடிக்கணினி திட்டத்தில், 3 ஆண்டு சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களையும் இணைக்க வேண்டும் என கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவை அரசு சட்டக் கல்லூரி 3 ஆண்டு இளநிலை சட்டப் படிப்பு பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்பு (B.A. LL.B) பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்கப்படுகிறது, என்றும் ஆனால் 3 ஆண்டு சட்டப் படிப்பு (LL.B) பயிலும் மாணவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இரு பிரிவு மாணவர்களும் ஒரே மாதிரியான சட்டக் கல்வியைப் பயின்று, ஒரே மாதிரியான பார் கவுன்சில் தேர்வுகளை எழுதி, ஒரே நீதித்துறையில்தான் பணியாற்றப் போகிறோம்.
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் மடிக்கணினி என்பது அத்தியாவசியம் என்றும் தங்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் குறிப்பிட்ட அவர்கள், தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

