கோவை: கல்வி நிதிக்காக போராடிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மத்திய அரசு SSA திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் உள்ளதை கண்டித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார் உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுதும் மருத்துவ சிகிச்சை பெற்று தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோவை நீதிமன்ற வளாகம் நுழைவாயில் முன்பு சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு உடனடியாக கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.