கோவை: எட்டிமடை பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள ஜெகநாதன் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு இருந்த வளர்ப்பு நாயை பிடித்து கவ்வி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எட்டிமடை அருகே மதுக்கரை வனப்பகுதி உள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
உயிர் சேதம் ஏற்படும் முன்பே வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் உறுதி செய்து உள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


