சூலூர் அருகே இருகூரில் சிறுத்தை நடமாட்டம்!

கோவை: சூலூர் அருகே சிறுத்தை ஒன்று தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதி கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த பகுதியில் எப்போதும் வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படும்.

Advertisement

குறிப்பாக இந்த அடர் வனத்திற்குள் யானைகள், சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளதால் இவை இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம்.

இதனிடையே அந்த கடந்த 12ம் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று, தனது வழித்தடத்த மறந்து, சூலூர் அருகே இருகூர் பகுதிக்கு வந்துள்ளது.

பின்னர் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளது. அங்கு சிறுத்தை உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், நிறுவனத்தின் இரவுப் பணிக் காவலரும் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் பதுங்கிய சிறுத்தை, அந்த காவலர் நகர்ந்து சென்றதும், ஒரே ஓட்டமாக சிறுத்தை ஓடி மறைந்தது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி சூலூர் மற்றும் இருகூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தற்போது அங்கே சிறுத்தை இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதும் சிறுத்தையைப் பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp