கோவை: கோவை வழியாக பெங்களூரு செல்லும் பெங்களூரு – எர்ணாகுளம் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் LHB பயணிகள் பெட்டிகள் இடம்பெறும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:
வண்டி எண் 12678 எர்ணாகுளம் – பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 20ம் தேதி முதல் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இதேபோல் 12677 பெங்களூரு – எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசிலும் இந்த பெட்டிகள் இடம்பெறும்.
LHB பெட்டிகள்:
ஜெர்மனியின் Linke-Hofmann-Busch நிறுவனம் வடிவமைத்தது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
சாதாரன பெட்டிகளை விட இந்த பெட்டிகள் பொறுத்தப்பட்ட ரயிலை அதிக வேகத்தில் இயக்கமுடியும். அதிக பயணிகள் பயணிக்கலாம்.
குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் மேம்பட்ட உள்ளமைப்புகள். அதிக தரத்திலான சஸ்பென்ஷன், மேம்பட்ட ஏசி வசதி இந்த பெட்டிகள் உள்ளன.
இந்த பெட்டியில் பிரேக் சிஸ்டம் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
பெட்டிகளின் அமைப்பு:
- AC Chair Car – 2
- Second Class Chair Car – 11
- AC Pantry Car – 1
- General Second Class – 4
- Luggage cum Brake Van – 1
- Power Car – 1
- மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
இந்த மாற்றம் பயணிகள் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.




