கோவை: கோவையில் தனியார் பிரியாணி உணவகத்தில் குருமாவில் இறந்து கிடந்த பல்லியை கவனிக்காமல் உணவருந்தியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலையரசன், அண்ணாதுரை. இவர்கள் சொந்த வேலைக்காக கோவை வந்துவிட்டு திரும்பும் போது இங்குள்ள நண்பர் ஒருவர் ஆர் எஸ் புரம் அருகில் உள்ள கோவை பிரியாணி என்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அனைவரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர் அப்போது அதற்கு ஊற்றப்படும் குருமாவில் முழு பல்லி உயிரிழந்து கிடந்துள்ளது. கலையரசன் முதலில் அதனை சரிவர கவனிக்காமல் அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனை அடுத்து அண்ணாதுரை மற்றும் நண்பர்கள் ஊழியர்களிடமும் கடையின் உரிமையாளரிடமும் முறையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் இது எங்கள் தவறு தான் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனிடையே கலையரசன் வாந்தி எடுத்துள்ளார். தற்பொழுது கலையரசனை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ஈரோடு பவானிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போதைக்கு கடையை மூட அறிவுறுத்தி உள்ளதாகவும் உணவகத்தில் உணவு சமைக்கும் இடம் பணியாளர்களின் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை உணவகத்தினர் சரி செய்த பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் ஆய்வு செய்து கடை செயல்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வீடியோ காட்சிகள்
வீடியோ காட்சிகள்
வீடியோ காட்சிகள்





