வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஆண் சடலம்- கொலையா? என விசாரணை…

கோவை வெள்ளலூர் பகுதியில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் கொலையா ? என காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்…

கோவை வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள காலி இடம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைப் பயிற்சி சென்றவர்களுக்கு அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதைடுத்து சென்று பார்த்த போது ஆண் பிணம் இருந்துள்ளது. இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் என்றும் அவரது உடலை மீட்ட காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் மோப்பநாய் உதவியுடன் அங்கு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நபர் யார் ?, கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என்ன காவல் துறையினர் தெரிவித்தனர்.

Recent News

Latest Articles