ஆஸ்திரேலியாவில் வேலை- கோவை வாலிபரிடம் மோசடி செய்த நபர் கைது…

கோவை: ஆஸ்திரேலியாவில் வேலை எனக் கூறி கோவை வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். 

Advertisement


அப்போது அருண் ஜேம்ஸ் -யிடம் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக வேலை காலியாக இருப்பதாகவும் அதற்கு வேலையை பெற்று தருவதாகவும் கூறி உள்ளார்.

அப்போது அதற்கு விசா உள்ளிட்ட பணி 3.5 லட்சம் பணம் வேண்டும் என்று கூறி உள்ளார். அதை நம்பி ஜேம்ஸ் அந்த பணத்தை கொடுத்து உள்ளார். 

ஆனால் அருண் வேலை வாங்கி கொடுக்கவில்லை பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவரது தந்தை டேனியல் ஆபிரகாம் புகார் கொடுத்தார். அதன் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர். 

இவர் மீது சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் மேலும் வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

Recent News

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நீதிபதியும் இணைந்து செயல்படுகிறார்கள்- கோவையில் முத்தரசன் பேட்டி…

கோவை: திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக CPI முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார் கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், CPI...

Video

Join WhatsApp