கோவை: கோவையில் மங்கி குல்லா கொள்ளையன் கைது சென்னையில் இருந்து வந்து முகாமிட்டது அம்பலமானது…
கோவை: கோவை குனியமுத்தூரில் வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, பணம் திருடிய மங்கி குக்லா கொள்ளையன் அடுத்தடுத்த கடை, வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (75). இவர் கடந்த 9ம் தேதி இரவு வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சாமுவேல்ராஜின் மனைவி கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்து சென்றார்.
Advertisement

அப்போது வீட்டிற்குள் பின்பக்க கதவு வழியாக புகுந்த கொள்ளையன் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதேபோல சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த சதீஸ் (30) என்பவர் கோவைப்புதூரில் நடத்தி வரும் மளிகை கடையிலும் கொள்ளையன் ரூ.34 ஆயிரத்தை திருடி சென்று இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சாமுவேல்ராஜ் மற்றும் சதீஸ் ஆகியோர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் கைரேனை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சாமுவேல்ராஜ் வீடு, சதீஸ் கடை மற்றும் 5 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் முகமூடி அணிந்து வீடுகளை நோட்மிடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து சாமுவேல்ராஜ் மற்றும் சதீஸ் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வந்தனர்.
அப்போது குனியமுத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
போலீசார் அவரை சோதனை செய்த போது அவரிடம் முகமூடி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தற்போது கோவை கணபதி சதுர்வேதி பகுதியில் தங்கிருந்து முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.