கோவை, மருதமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்ற நிலையில் 1.24 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது…
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலையில் வீற்று இருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிரந்தர உண்டியல் திறப்பு நடைபெற்றது.
திருக்கோயில் அறங்காவலர் குழுவினர், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் முன்னிலையில் இந்த உண்டியல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோவை உதவி ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
நிரந்தர உண்டியலில் இருந்து மட்டும் 1,19,56,012 ரூபாய் ரொக்க காணிக்கையாக வசூலிக்கப்பட்டது. மேலும், குடமுழுக்குக்காக வைக்கப்பட்டு இருந்த தற்காலிக உண்டியலில் இருந்து 5,02,307 ரூபாய் காணிக்கை பெறப்பட்டது.
பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் ரொக்கத்துடன், கணிசமான அளவிலான தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களும் இருந்தன. அதன்படி, பொன் 128.100 மில்லி கிராம்,வெள்ளி -5016 கிராம்,பித்தளை- 16543 கிராம் திருக்கோயில் நிர்வாகத்தின் மேற்பார்வையில், உரிய விதிமுறைகளின் படி உண்டியல் திறப்பு மற்றும் எண்ணும் பணி அமைதியாக நடைபெற்றது.