கோவை: கோவை மாவட்டம் பேரூர் வட்டத்திற்குட்பட்ட மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ரூ.1.38 கோடி காணிக்கையாக பெறப்பட்டன.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாது, சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.
இதனிடையே மருதமலை கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு, பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
திருக்கோவில் தக்கார் ஜெயகுமார், துணை ஆணையர் கவிதா, கோவை உதவி ஆணையர் உஷா நந்தினி, பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
கோவையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது…
இதில், தங்கம் 175 கிராம், வெள்ளி 5 கிலோ 527 கிராம், பித்தளை 39 கிலோ 400 கிராம் கிடைத்துள்ளது.
மேலும், ரொக்கமாக ரூ.1 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 232, ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 877 மதிப்பிலான காசோலை மற்றும் உண்டியலில் ரொக்க வரவாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 597 கிடைத்துள்ளது.
இதன் மூலம் மொத்தமாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 29 ஆயிரத்து 706 மதிப்பிலான காணிக்கைகள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

