கோவை: கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டதில் 65 லட்சம் காணிக்கை வரவு பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நிரந்தர உண்டியல் திறக்கப்பட்ட காணிக்கை எண்ணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் ஜெயகுமார், துணை ஆணையர், செயல் அலுவலர் செந்தில்குமார் (தேக்கம்பட்டி, அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில்), உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கைலாசமூர்த்தி, பேரூர் சரக ஆய்வாளர் பெயவானி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் திறப்பில் ரூ.65,54,589 ரொக்கம், 108 கிராம் பொன், 4 கிலோ 98 கிராம் வெள்ளி மற்றும் 13 கிலோ 950 கிராம் பித்தளை வரப் பெற்றதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.