கோவை:எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆன பிறகுப்கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று கோவை வந்த பிரதமர் இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு விழிப்புணர்வு செய்தியை கூறி இருக்கிறார் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
தற்போது திமுகவும் கூட்டணி கட்சிகளும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும் திமுக எப்பொழுதும் அரைகுறையாகவும் பொய் செய்திகளையும் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்றார். பிரதமருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யை கூறுவதாகவும் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்றாலும் கூட குறிப்பிட்ட சதவிகிதம் தேவை என்றும் அப்படி இருக்கும்பொழுது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு குறிப்பிட்ட மக்கள் தொகை இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
மக்கள் தொகை, மெட்ரோ பயன்பாடுகள் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுத்திருக்க வேண்டும் மத்திய அரசு வரையறை என்பது தனிப்பட்ட மாநிலங்களுக்கு அல்ல என்றும் அது பொதுவான பாலிசி எனவும் அதனை ஒழுங்காக படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே இந்த அறிக்கையை கொடுத்துள்ளார்கள் என தெரிவித்தார். மேலும் சென்னை மெட்ரோ பயன்பாடு பிப்ரவரி கணக்கின்படி நான்கு லட்சம் பயணிகள் தான் என்று தெரிவித்தார். பாஜக அரசுக்கு கெட்ட பெயரை கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள் என்றும் கூறினார்.
கோவை மெட்ரோ திட்டம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிக் பஜார், நஞ்சப்பாசாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் நெரிசலான பகுதிகள் என்றும் இந்த பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் இங்குள்ள கடைகளை இடிக்க வேண்டும் கடைகளை இடித்து தள்ளும் அளவிற்கு திட்டங்களை போட்டு மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்கள் என கூறினார்.
கோவை மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றி பெற செய்யாததால் கோவை மக்களை வஞ்சிப்பதற்காகவே செயல்படுத்த முடியாத திட்ட அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் கொடுத்துள்ளது என்றும் கூறினார். அதே சமயம் பிற மாநிலங்களுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் பாட்னா போபால் எல்லாம் சுற்றுலாவை மையப்படுத்தியும் போபால் கேப்பிட்டல் சிட்டி என்பதால் அதனை மையப்படுத்தியும் அனுமதி கேட்டு உள்ளார்கள் என்றும் மேலும் அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் சேர்த்து திட்ட அறிக்கை கொடுத்து அனுமதி பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு கேட்டுள்ள விளக்கங்களை எல்லாம் எந்த ஒரு ஹோம் ஒர்க்கும் செய்யாமல் கோவை மக்களை வஞ்சிக்கும் செயலாகவே செயல்படுத்த முடியாத அறிக்கையை தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ளதாக விமர்சித்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு கோவைக்கு மெட்ரோவை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். 10க்கு 10 கொடுத்த கோவை மக்களுக்கு மிகச் சரியாக திட்டமிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை திட்ட வரையறைகளுக்கு உட்பட்டு அதனை மாற்றியமைத்து பெற்று வருவோம் எனக்கோவை மக்களுக்கு உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் குளங்கள், 16 மெடிக்கல் காலேஜ்க்கு ஒரு வருடத்தில் அனுமதி, டிபன்ஸ் இன்னோவேசன் ஹப், ரயில்வே திட்டங்கள், கோவையில் இரு ரயில் நிலைய மேம்பாடுகள், ஏழை மக்களுக்கு வீடு, விவசாயிகளுக்கு நிதி உதவி, திருச்சி மாவட்ட நியூ டெர்மினல், போன்ற அனைத்தையும் மோடி தான் தந்துள்ளதாக தெரிவித்தார்.
நேற்று கோவைக்கு பிரதமர் வந்துள்ள பொழுது ஒரு Protocol அடிப்படையிலாவது முதல்வர் வந்து பிரதமரை பார்த்திருக்க வேண்டும் எனவும் என்ற அவர் தேர்தல் வருவதால் இந்த மெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.
வால்பாறை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர் பள்ளிக்கல்வித்துறையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூட்டம் போடுகிறார்கள் என்றும் அதில் நடிகர் நடிகைகளை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள் என்று தெரிவித்த அவர் ஆனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை ஆசிரியர்கள் குறைபாடு போன்ற பல்வேறு விஷயங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கொள்ளை வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனை அரசை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் முதல்வர் டெல்டா காரர் என்று கூறி டெல்டா மக்களை ஏமாற்றுகிறார் என்றும் கோவைக்கு சாலை போடுவதற்கு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி இருப்பதாக ஒவ்வொரு முறையும் கூறுகிறார்கள் நானும் நான்கு வருடங்களாக சட்டமன்றத்தில் அந்த 200 கோடி ரூபாய் எங்கே என்று கேட்டு வருகிறேன் என தெரிவித்தார்.
மேலும் டாஸ்மார்க் சோதனை நடைபெற்ற பொழுது முதல்வர் ஏன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் என்றும் உங்கள் அமைச்சர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் ஜெயிலுக்கு சென்று வந்தவர்களை எல்லாம் அமைச்சராக வைத்திருப்பவர்கள் திமுக காரர்கள் தான் என தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் 40 எம்பிக்கள் இருந்தும் என்ன பிரயோஜனம் என்றும் கேள்வி எழுப்பிய அவர் ஏன் அவர்களால் திட்டங்களை கொண்டு வர முடியவில்லை என கேள்வி எழுப்பினார்
கோவைக்கு மெட்ரோ நாங்கள் உறுதியாக கொண்டு வருவோம் என்றும் 2026 தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் கோவைக்கு மெட்ரோ வரும் என தெரிவித்தார்.
மெட்ரோ திட்டத்தில் என்ன இடையூறு உள்ளது என்று தமிழக அரசு தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவை மக்கள் கொடுக்கின்ற வரியை தமிழக அரசு திரும்ப கொடுக்கிறதா என்றும் உரிய சாலை போட்டுக் கொடுக்கிறதா என்றும் கேள்வி அனுப்பியவர் தமிழகத்தில் அதிக வருகை செலுத்தும் மாவட்டம் கோவை மாவட்டம் தான் என தெரிவித்தார்.
மேலும் ஒழுங்காக அவர்களை (DMK) Form யை fill up செய்ய சொல்லுங்கள் என்றும் மெட்ரோ குறித்து சட்டமன்ற உறுப்பினர் என்னிடம் எந்த ஒரு கருத்தும் கேட்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் மெட்ரோ ரயில் குறித்து ஒரு ஆபீஸை கூட இங்கு போடவில்லை என தெரிவித்தார்.
தேர்தலுக்காக தான் மெட்ரோ பணிகள் பதினைந்து மாதங்கள் தாமதம் ஆகி இருக்கிறதா என்று கேள்விக்கு, தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என குறிப்பிட்டார்.
மேலும் நாங்கள் வந்தால் டெக்னிக் விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து மெட்ரோ பணிகளை மேற்கொள்வோம் என்றும் முதலில் அதற்கு எங்களுக்கு வாய்ப்பு வரட்டும் என தெரிவித்தார். மெட்ரோ பணிகளில் இரட்டை வேடம் திமுக போடுவதாகவும் அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து பல்வேறு அரசியல் நகர்வுகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
கோவை வந்த பிரதமரிடம் மெட்ரோ மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களை பேசி இருப்பதாகவும் ஆனால் அதை எல்லாம் கூற முடியாது என தெரிவித்தார்.
பிரதமர் குறித்து அவதூறு பேசி இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு திமுகவின் டிஎன்ஏ என்பதை தரகுறைவாக பேசுவது தான் என்றும் பிரதமரை தரகுறைவாக பேசுவது திமுகவிற்கு புதிது அல்ல என்றும் தெரிவித்த அவர் பிரதமரை அவதூறாக பேசியவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நாங்கள் புகார் அளித்தால் அதனை கண்டு கொள்வதில்லை என குறிப்பிட்டார்.


