Header Top Ad
Header Top Ad

எதற்கெடுத்தாலும் காசு… கேள்வி கேட்டால் மிரட்டல்… கோவைப்புதூர் மக்கள் குமுறல்!

கோவை: கோவைப்புதூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களிடம் பராமரிப்பு என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும், கேள்விகேட்டால் மிரட்டுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவைப்புதூர் அருகே உள்ள மலைநகர் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அங்கு வசிக்கும் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

Advertisement
Lazy Placeholder

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

எங்கள் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை. ஆனால், பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வசூலித்த பணத்தில் ஏன் பராமரிப்பு செய்யவில்லை என்று கேட்டால் வீடுகளுக்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

இந்த பிரச்னையில், கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினர்.

Advertisement
Lazy Placeholder

Recent News

Latest Articles