கோவையில் தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்…
கோவை கணபதி பகுதிய சேர்ந்த தாய், மகள் ஒரே நேரத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதி உள்ளனர். தாய் லாவண்யா தனது தேர்வில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களில் , 335 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.
அதேபோல், அவரது மகள் அனன்யா தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் 548 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.