கோவை: கோவையில் வரவிருக்கும் மெட்ரோ ரயில் குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். கோவையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது கோவை ரயில் நிலையத்தை சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும் நாங்களும்
ரயில் நிலையத்தை ஆய்வு செய்தோம் என தெரிவித்தார். கோவை ரயில் நிலையத்தை பொறுத்த வரை போத்தனூர், வடகோவை மேம்படுத்தப்பட்டு மூன்று இடங்களும் பயன்படுத்தபடும் வடகோவை,
போத்தனூரில் இருந்து கிளம்பும் வகையில் ரயில்கள் இயக்க வேண்டும் என சேலம் கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.
தினசரி கோவை பெங்களுர் இரவு ரயில், ராமேஸ்வரம் ரயில், ஈரோடு சேலம் மெமு ரயில் போன்றவை இயக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கின்றோம் எனவும்,
கோவையில் இருந்து வேளாங்கன்னி வரை ரயில்கள் நீடிக்க கோரி இருப்பதாக தெரிவித்தார். தனியார் பங்களிப்புடன் கோவை ரயில் நிலைந்த்தில் மேம்பாட்டு பணிகள் செய்யப்படும் என சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறினார். வடகோவை மேம்பாலம் பிப்ரவரி மாதம் தயாராகி விடும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் என்றார்.
கோவையில் மெட்ரோ ரயில் செயல்படுத்த உள்ள 3 வழி தடங்களில் , முதல் கட்டமாக செயல்படுத்தபட இருக்கும்
உக்கடம் – நீலாம்பூர், கோவை ஐங்சன் – வலையாம்பாளயம் ஆகிய இரு வழிதடங்களில் சர்வே பணிகள் நடைபெற இருக்கின்றது என்றும், சத்தியமங்கலம் சாலையில் 1.4 கிலோ மீட்டர் சாலை அகலபடுத்தபட்டு நடுவில் மெட்ரோ ரயில் நிலையம் வருகின்றது எனவும் தெரிவித்தார். வடகோவை கூட்ஷெட் டெப்போவை வேறு பகுதிக்கு மாற்றிதர வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்திற்கு இயக்குநரை நியமிக்காததால் , ஒரு வருட காலமாக அந்த பணியிடம் காலியாக இருக்கின்றது என்றும்
விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு நிலத்தை முழுமையாக ஒப்படைத்து விட்டது எனவும், இருப்பினும் விமான நிலைய விரிவாக்க பணிகளானது மிக மெதுவாக நடைபெறுகின்றது என்றார்.இது தொடர்பாக விமானநிலைய ஆணையர் மற்றும் விமானத்துறை அமைச்சரை சந்திக்க இருக்கின்றோம் என்றார்