999 காலிப்பணியிடங்கள்; தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு… Apply link இதோ

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ( (Medical Services Recruitment Board – MRB) நர்சிங் உதவியாளர் கிரேடு II பதவிக்கான 999 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

நர்சிங் உதவியாளர் பணிக்கான படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு -க்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பலருக்கு அரசு வேலையில் சேர்வது கனவாக உள்ளது. இந்த நிலையில் நர்சிங் உதவியாளர் கோர்ஸ் முடித்தவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு, ஏனெனில் ஒரே நேரத்தில் மொத்தம் 999 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவித்துள்ளது, இந்த நிலையில் கண்டிப்பாக தகுதி உள்ள பலருக்கு இந்த வேலை கிடைக்கும்.

அதன்படி,கடந்த ஜனவரி 19 முதல் தொடங்கி இந்த வேலைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் MRB இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: நர்சிங் உதவியாளர் கிரேடு II

காலிப்பணியிடங்கள் மொத்தம் : 999

இணையதளம் : https://mrb.tn.gov.in/

பணியிடங்கள் பொதுப்பிரிவு – 308

பிசி – 264

பிசி(எம்) – 35

எம்பிசி – 200

எஸ்சி – 152

எஸ்சி(ஏ) – 30,

எஸ்டி – 10

என நிரப்பப்படுகிறது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 40 காலிப்பணியிடங்களும் மற்றும் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கான 203 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணிக்கான வயது மற்றும் கல்வித்தகுதி :

கடந்த 01.07.2026 தேதியின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது கண்டிப்பாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். OC பிரிவினருக்கு அதிகபடியாக 34 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 44 வயது வரையும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதர பிரிவினருக்கு மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp