Header Top Ad
Header Top Ad

கோவையில் MSME ஏற்றுமதி வணிக மேம்பாடு கருத்தரங்கு…

கோவை: கோவையில் மத்திய அரசு சார்பில் MSME ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

கோவையில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற MSME ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்தான கருத்தரங்கில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்..

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா கூட்டரங்கில் மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில் ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

MSME களுக்கான ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்து பல்வேறு விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த பல்வேறு நிறுவனத்தினர் பங்கேற்று ஏற்றுமதி வணிக மேம்பாடு குறித்து தெரிந்து கொண்டனர்.

இந்த கூட்டரங்கில் தயாரிப்பு பொருட்களை ஆவணப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், வெளிநாட்டு சந்தைகளில் ஏற்றவற்றை கண்டறிதல், ஏற்றுமதி வாய்ப்புகள், மத்திய அரசின் திட்டங்கள், INCO விதிமுறைகள், FTP திட்டங்கள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேலும் ஏற்றுமதியில் டிஜிட்டல் தளங்களின் பங்களிப்பு குறித்தும் விவரிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கிக் டிஜிஎஃப்டி இணை அதிகாரி ஆனந்த் மோகன் மிஸ்ரா, MSME இணை இயக்குனர் சுரேஷ் பாபு உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Recent News