கோவை: பராசக்தி தீ பரவுமா என்ற கேள்விக்கு தீ வைத்தால் பிலீம் எரிந்து விடும் என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீன் இரண்டு தினங்கள் கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை நேரில் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றுள்ளார் என்றார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மதமாற்றம் செய்யப்படுவது தொடர்பான கேள்விக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, ஊட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மதம் மாற்றம் நடைபெறுவதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறக்கூடாது என்பதே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு அவரவர்களின் மதம் அவர்களுக்கு பெரிது என தெரிவித்தார்.
பராசக்தி திரைப்படம் பார்த்தீர்களா?
பராசக்தி தீ பரவுமா என்ற கேள்விக்கு தீ வைத்தால் பிலீம் எரிந்து விடும் என பதிலளித்தார்.
இரண்டு தினங்களில் தொகுதி பங்கீடு குறித்து ஏதாவது பேசப்பட்டதா? என்ற கேள்வி, அது தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அரசியல் பேசவில்லை என்றும், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் இப்போது அது குறித்து பேசப்படவில்லை என்று கூறி சென்றார்.

