Breaking News: நல்லகண்ணு கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு ஸ்டாலின் விரைவு..!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

101 வயதாகும் தியாகியும், மூத்த அரசியல் தலைவருமான நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இதனிடையே, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக வந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார். மேலும், அவரது உடல்நிலை குறித்த மருத்துவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார்.

Nallakannus Health Report

இதனிடையே, மருத்துவமனைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான மு.வீரபாண்டியன், “நாட்டுக்காக போராடிய நல்லகண்ணு, தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்.

உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் நல்லகண்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தமிழ்நாட்டு முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் உறுதிமொழி

தமிழ்நாட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலின் 73வது பிறந்தநாளில் வெளியிட்ட உறுதிமொழியில் தமிழும் தமிழ்நாடும் காப்பதே வாழ்நாள் கடமை என வலியுறுத்தினார்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.